சட்டவிரோத வனவிலங்கு வாணிகத்திற்கு ஏதுவான நாடாக இருப்பதாக டராபிக் எனப்படும் (வனவிலங்கு வர்த்தக கண்காணிப்பு வலயைமைப்பு) மலேசியாவை அடையாளம் கண்டிருப்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் கழகம் தனது வருத்தத்தைத் தெரிவித்து கொள்வதாக அதன்தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். அனைத்துலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வருட கருப்பொருள் “சட்டவிரோத வனவிலங்கு வாணிகத்துக்கு எதிரான போராட்டம்” என்பதாகும். சுற்றுச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்கும் பல்வெறு காரணங்களுக்காக மலேசியா பிரபலம் அடைந்து வருகிறது. அவற்றில் குறிப்பாக :
* 2013ல் வெப்பமண்டல காட்டு வெட்டு மர ஏற்றுமதியாளர்களில் மலேசியா முன்னோடியாக இருந்தது
* ஊர்வன பிராணியின் தோல் ஏற்றுமதியாளர்களிலும் மலேசியாவே முன்னோடி
* 2010 மற்றும் 2013 ல் அரசு சாரா நிறுவனங்கள் சுமார் 2,241 வேட்டையாடும் பொறிகளையும், 1,728 அதற்கான சட்டவிரோத முகாம்களை அழித்தது.
சட்டவிரோத வினவிலங்கு வாணிகம் நம்நாட்டில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மலேசியாவில் 26 பாதுகாக்கப்பட்ட பிராணிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும், புலி மற்றும் 11 விதமான வௌவால்கள் உட்பட அனைத்தும் அழிந்து போய்விடும். ஏற்கெனவே ஜாவா காண்டாமிருகம், இந்திய சாம.பல் கீரிப்பிள்ளை போன்றவை நம்நாட்டில் அழிந்து போய்விட்டது. வேட்டையாடுதல், சட்டவிரோத வாணிகம், பாதுகாக்கப்பட்ட பிராணிகளை உடைமையாக்கி கொள்வது, மிருகங்களின் உறுப்புகளைக் கவர்ச்சியான உணவாக உட்கொள்ளும் வேட்கை போன்ற காரணங்களினால், நிறைய மிருகங்கள் பாதிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன. மலேசியாவில் தந்ந வாணிகம் முறையாக மதிப்பீடு செய்யப்படாவிட்டாலும் கூட, பிரபலமான சட்டவிரோத தந்த ஏற்றுமதிக்கு மலேசியா இரண்டாவது நாடாக இருக்கிறது என வைஸ் (WISE) கூறியிருக்கிறது. மலேசிய பொறுப்பாளர்களின் கூற்றுப்படி கைப்பற்றப்பட்ட 60 விழுக்காடு எடையுள்ள தந்தம் சீனாவிற்கு கடத்தப்படுபவையாகவே இருக்கிறது. இந்தக் கள்ள தந்த ஏற்றுமதிக்கு கிள்ளான் துறைமுகமே தேர்வு மையமாகவும் இருக்கிறது. அதேப்போல் ஊர்வன பிராணிகளின் தோல் ஏற்றுமதியாளர்களில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் மலேசியா ஆறாவது இடத்தில் இருக்க்¢றது. ஒவ்வொரு 1000 தோல் வியாபாரம் ஆகும் போது ஒரு தோல் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இதில் மலைப்பாம்பின் தோல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதற்கான உண்மையான சந்தை நிலை எப்படி இருக்கிறது என்பதும் தெரியாது என இத்ரிஸ் கூறினார். 2009லிருந்து 2013 வரை மலேசியாவும் இந்தோனிசியாவும் சராசரி 22 மெட்ரிக் தான் மலைப்பாம்பு இறைச்சிகளை ஏற்றமதி செய்திருக்கிறது. இது ஏறக்குறைய 2,000திலிருந்து 4,000 மலைபாம்புகளின் எண்ணிக்கைக்குச் சமமாகும். மலைப்பாம்பின் பித்தப்பை பாராம்பரிய வைத்தியதிற்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் சிங்கப்பூர், 50,000 எறும்புதிண்ணிகளின் தோல்களை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. சபாவில் சுமத்ரா காண்டாமிருகம் பரவலாக வேட்டையாடப்படுகிறது. அதன் கொம்பிற்கு மருத்துவ தன்மைகள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு கிலாவுக்கு மலெசிய ரிங்கிட் பத்தாயிரம் வரை கிராக்கியைக். கொண்டிருக்கிறது.வேட்டையாடுவதற்கு லைசன்ஸ் கொடுக்கப்படுவதால். இன்னும் அதிகமான மிருகங்கள் சூறையாடப்படுவதற்கு வழிவகுக்கும். மான்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற மிருகங்களை வேட்டையாடுவதற்கான லைசன்ஸ் கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் கேட்டுகொள்வதாக இத்ரிஸ் கூறினார். மாநில அரசாங்கங்கள் பாதுகாக்கப்பட்ட மிருகங்களை வியாபாரம் ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறது. அதற்கு பதில் சூழியிலை பாதுகாக்கும் அம்சங்களில் அக்கறை செலுத்தி, பாதுகாப்பின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அவை இறங்க வேண்டும் என் இத்ரிஸ் குறிப்பிட்டார். வனவிலங்கு வியாபாரிகள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணயத்தள சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் வியாரங்களை அனைத்துலக ரீதியில் மேற்கொண்டு வருகின்றார்கள். சட்டவிரோத வனவிலங்கு வியாபாரத்தைக் கட்டப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடநவடிக்கைகள் பயனளிக்காமலேயே உள்ளது. இதற்கு காரணம், பயனற்ற மற்றும் குறைவான அமலாக்கமுமேயாகும். மலேசியா தீவிரமான கண்காணிப்பு முறையை அமல்படுத்தினால் மட்டுமே இந்த சட்டவிரோத வாணிகத்தைக் குறைக்க முடியும். அதற்கு இணயத்தள சட்டவிரோத வியாரத்தை மிக அணுக்கமாக கண்காணித்து, அனைத்துலக ரீதியில் இப்பிரச்னையை அணுக வேண்டும். கடுமையான தண்டைனைகள் உதாரணத்திற்கு, அதிகமான அபராத தொகை, சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு, அதனை முறையாகவும் அமல்படுத்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் எதிர்பார்க்கிறது. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் முறையான திட்டமிடல், தெளிவான கொள்கை முறையும் மிகச் சரியாக செயல்படுத்தப்பட்டால், மனிதர்களும் விலங்குகளும் இப்புவியில் சமரசமாக வாழ்வதற்கு வழி பிறக்கும்.
எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்